தென்கொரியா ராணுவ மந்திரி தற்கொலை முயற்சி
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிறப்பித்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
சியோல்,
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். இதற்கிடையே அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் ராணுவ மந்திரி கிம் யாங் ஹியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் சியோலில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது கழிவறைக்கு சென்ற அவர் தனது ஆடையை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து தென்கொரியா அதிபர் அலுவலகத்தில் போலீசார் புகுந்து ரெய்டு நடத்தினர். இந்தநிலையில் அந்த நாட்டில் தலைமறைவாக உள்ள தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய முக்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.