டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இந்தியர் நியமனம்

சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-08 20:49 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமீப காலமாக இந்தியர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா (வயது 45) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த பொறுப்பில் உள்ள சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ள வைபவுக்கு கணக்கியல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. மேலும் இவர் தொழில்நுட்பம், சில்லரை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்