அமெரிக்கா: மின்னல் தாக்கி தீவிர சிகிச்சைபெற்று வரும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்...!

நண்பர்களுடன் பூங்காவில் நடந்து சென்றுகொண்டிருந்த சுஸ்ருன்யா கொடுரு மீது மின்னல் தாக்கியது.

Update: 2023-07-28 07:26 GMT

வாஷிங்டன்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுஸ்ருன்யா கொடுரு (வயது 25). இவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார்.

இதனிடையே, கடந்த 2-ம் தேதி சுஸ்ருன்யா தனது நண்பர்களுடன் சான் ஜனிடோ பூங்காவிற்கு சென்றுள்ளார். பூங்காவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென சுஸ்ருன்யாவை மின்னல் தாக்கியது. இதில் நிலைகுலைந்த சுஸ்ருன்யா படுகாயங்களுடன் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சுஸ்ருன்யா தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுஸ்ருன்யாவின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும், அவர் கடந்த வாரம் முதல் வெண்டிலேட்டர் உதவியின்றி தானாக சுவாசிப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சுஸ்ருன்யாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்