ரஷியா, உக்ரைன் கடலோர பகுதியில் புயல் தாக்குதல்; 3 பேர் பலி

இதனை தொடர்ந்து, கிரீமியாவில் அவசரகால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-11-28 02:28 GMT

கீவ்,

கருங்கடல் பகுதியில் வீசிய புயலால், ரஷியாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிரீமியா, ரஷியா மற்றும் உக்ரைன் பகுதியை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புயல் வீசியதில், மரங்கள் தூக்கி எறியப்பட்டன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனை ரஷிய அரசு ஊடகம் மற்றும் உக்ரைனின் ஆற்றல் அமைச்சகமும் தெரிவித்து உள்ளது.

இதில், சொச்சி நகரில் ஒருவர் பலியானார். மற்ற இருவரில் ஒருவர் கிரீமியா பகுதியிலும், மற்றொருவர் கெர்ச் ஜலசந்தி பகுதியில் உள்ள கப்பலில் பயணித்தபோதும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதன்படி, உக்ரைனில் 1.5 லட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் இருளில் சிக்கியுள்ளன.  இதனை தொடர்ந்து, கிரீமியாவில் அவசரகால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்