தென்கொரியாவில் கனமழையால் நிலச்சரிவு; 20 பேர் பலி

தென்கொரியாவில் கனமழைக்கு 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-15 17:20 GMT

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தது.

அதேபோல் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்