சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 6 பேர் பலி

சிறிய ரக விமானம் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-07-08 17:51 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து இன்று 6 பயணிகளுடன் சிறிய ரக விமானம் கலிபோர்னியாவுக்கு புறப்பட்டது. விமானம் கலிபோர்னியாவின் மிரிடோ நகரில் உள்ள விமான நிலையம் அருகே விமானம் வந்தது.

அப்போது, நடு வானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மிரிடோ விமான நிலையம் அருகே உள்ள விளைநிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தரையில் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானத்தில் எரிந்த தீயை அணித்து அதில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்