போர்ப்பதற்றம்: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்

இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-07-01 03:09 GMT

பெய்ரூட்,

இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களையும் முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது. எனவே லெபனானில் வசிக்கும் தனது நாட்டின் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி சவுதி அரேபியா அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்