எகிப்து நாட்டின் கிராண்ட் முப்தியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி எகிப்தின் கிராண்ட் முப்தி எனப்படும் மூத்த தலைவரான டாக்டர் ஷாக்கி இப்ராஹிம் ஆலமை சந்தித்தார்.

Update: 2023-06-25 09:25 GMT

புது டெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு அரசு முறைப் பயணத்தின் போது எகிப்தின் கிராண்ட் முப்தி எனப்படும் மூத்த தலைவரான டாக்டர் ஷாக்கி இப்ராஹிம் ஆலமை சந்தித்தார்.

கிராண்ட் முப்தி தமது சமீபத்திய இந்தியப் பயண அனுபவத்தைப் பிரதமரிடம் அன்புடன் நினைவுகூர்ந்தார், மேலும் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளையும் அவர் எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் கிராண்ட் முப்தி பாராட்டினார்.

சமூக மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

எகிப்தின் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் தார்-அல்-இப்தாவில் தகவல் தொழில்நுட்ப உயர் திறன் மையத்தை இந்தியா அமைக்கும் என்று பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்