வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.;
டாக்கா,
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. வங்காளதேச தேசிய கட்சி தலைவரான இவருக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிகாலை 4 மணியளவில் தலைநகர் டாக்காவில் உள்ள வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கலிதா ஜியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அண்மையில் நடந்த வன்முறையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறினார். அதுவரை வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, பின்னர் ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியா நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.