கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-09-16 02:33 GMT

ஒட்டவா,

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. போர்ட் மெக்நீல் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்