இலங்கை விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம்...! சீனா எச்சரிக்கை...!

இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் வருகை தருவது தொடர்பாக இந்தியா, சீனா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பூசல் நிலவி வருகிறது.;

Update:2022-08-11 11:45 IST

பீஜிங்,

சீனா, தனது 'யுவான் வாங் 5' என்ற ஆராய்சி கப்பலை இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையில் சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உளவு கப்பல் என்றும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாக கவலையை வெளிப்படுத்தியது.

அதை தொடர்ந்து, 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையை சீனா வலியுறுத்தியது. ஆனால் இலங்கை அதை ஏற்கவில்லை.

இந்தநிலையில் தடையை மீறி சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு, அந்த கப்பல் ஹம்பன்தொட்டா வந்து சேர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் வருகை தருவது தொடர்பாக இந்தியா, சீனா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பூசல் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. மேலும், அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம்.எனவே, உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு "பாதுகாப்பு கவலைகள்" என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது என கூறி உள்ளது.

இந்நிலையில், சீனா தான் திட்டமிட்டபடி, உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று அனுப்பிவைக்கிறது. அங்கு எரிபொருளை நிரப்பிய பின்னர் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று தான் துறைமுகத்தை விட்டு கப்பல் கிளம்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உளவு கப்பலின் நகர்வை இந்தியாவும் கூர்ந்து கவனித்து வருகிறது. 2007ஆம் ஆண்டு கட்டப்பட்ட யுவான் வாங்க் 5 உளவு கப்பல் 11,000 டன் பொருள்களை வைத்திருக்கும் திறன் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்