எக்ஸ்ஏஐ எனும் புதிய நிறுவனத்தை தொடங்கினார் எலான் மஸ்க்

எக்ஸ்ஏஐ எனும் புது நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கினார்.

Update: 2023-07-13 07:53 GMT

நியூயார்க்

ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

ஏஐ என்பது தொற்றுநோய் மற்றும் அணுஆயுத போருக்கு இணையான ஆபத்து என்று டான் ஹென்ட்ரிக்ஸ் எச்சரித்திருந்தார். இவர் தற்போது எக்ஸ்ஏஐ குழுவிற்கு ஆலோசனைகள் வழங்குபவராக உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் டிருத்ஜிபிடி எனும் புதிய செயலிக்கான தனது திட்டங்களைப் பற்றிய விவரங்களை மஸ்க், பகிர்ந்து கொண்டார். மேலும் மக்களுக்கு 3-வதாக செயலியை உருவாக்குவேன் என நினைப்பதாக கூறியிருந்தார்.

ஓபன்ஏஐ அல்லது கூகுள் டீப்மைண்ட் போன்ற ஒரு ஏஐ நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கு ஜிபியு எனப்படும் மிகவும் விலையுயர்ந்த ஸெமிகண்டக்டர்கள் தேவைப்படுவதால் மஸ்க்கின் இந்த ஏஐ ஆர்வத்தை மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் ஒரு முயற்சியாக மென்பொருள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்