கடத்தி,மதமாற்றம் செய்து திருமணம் செய்த சிறுமி மீண்டும் கடத்தியவரிடம் அனுப்பிய நீதிமன்றம்
கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்த சிறுமி மீண்டும் கடத்தியவரிடம் அனுப்பிய பாகிஸ்தான் நீதிமன்றம்;
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தில் உள்ள பதே சவுக் பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் நான்கு முஸ்லிம் ஆண்களால் கடத்தப்பட்ட இந்து சிறுமி, வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
உள்ளூர் ஊடக அசெய்திகளின் சந்தா என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மூத்த சகோதரியுடன் வேலை செய்த உள்ளூர் மில்லில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷமன் மாக்சி மற்றும் மேலும் மூவரால் கடத்தப்பட்டார்.
பின்னர் பலுசிஸ்தானில் வைத்து ஆகஸ்ட் 30 அன்று சந்தா ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரின் திருமணச் சான்றிதழில் அந்த பெண்ணுக்கு 19 வயது என்பதைக் காட்டுகிறது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மைனர் சிறுமி அதிகாரிகளால் மீட்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கோர்ட்டு சிறுமியை பெற்றோரிடம் செல்ல அனுமதிக்கவில்லை என்றும், அவர் மீண்டும் "கடத்தப்பட்டவரிடம்" ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சந்தா தனது பெற்றோரைக் கட்டிப்பிடித்து அழுவதைக் காணலாம்.
பாகிஸ்தானின் மக்கள்தொகையில், முஸ்லிம்கள் 97 சதவீதம் உள்ளனர், அதே சமயம் இந்துக்கள் சுமார் 2 சதவீதம் உள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் அண்டை நாடான இந்தியாவின் எல்லையில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.