இலங்கையில் வலுக்கும் போராட்டம்: கொழும்புவில் திரளும் லட்சக்கணக்கான மக்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் நளை லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கொழும்பு,
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நளை பத்து லட்சம் மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லம் அருகே நளை காலை 9 மணி அளவில் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.