இந்தியா பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கும் சான்றுகள் எங்களிடம் உள்ளன; பாகிஸ்தான் மிரட்டல்

பாகிஸ்தானை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத ஊக்குவிப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என அந்நாடு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.;

Update: 2020-11-14 22:35 GMT
லாகூர்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி, ராணுவ செய்தி தொடர்பு அதிகாரி பாபர் இப்திகார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் குரேஷி கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்திய உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  அவை பாகிஸ்தானிய எல்லை பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத ஊக்குவிப்புக்காக இந்திய நிலம் பயன்பட அந்நாடு அனுமதிக்கிறது.  அண்டை நாடுகளில் இருந்து இந்தியா தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறினார்.

தெற்காசிய பகுதியில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி பேசி வந்த நிலையில், பாகிஸ்தானிய அதிகாரிகள் இந்தியா மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் எதிரியாக உள்ள இந்தியாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளுக்கு எங்களிடம் மலையளவு சான்றுகளும் உள்ளன என பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சான்றுகளை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைப்போம்.  சர்வதேச தலையீடு இன்றி தெற்காசியாவில் அமைதிக்கான உத்தரவாதம் ஏற்படுவது கடினம் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்