வெற்றிக்கு முன்பாகவே டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்லோவேனியா பிரதமர்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்துவருகிறது.;

Update: 2020-11-04 15:03 GMT

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்துவரும் நிலையில் அதிபர் ட்ரம்புக்கு ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜேன்ஸ் ஜனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நேற்றுநடைபெற்று முடிந்ததை தொடர்ந்து இரவு முதல் வாக்குகளை எண்ணும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறன்றன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் 238 இடங்களையும் அதிபர் ட்ரம்ப் 218 இடங்களையும் கைப்பற்றியுள்ள நிலையில் ஜார்ஜியா, மிசிகன், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நொவாடா, விஸ்காஸின் ஆகிய மாகாணங்களில் கடுமையான இழுபறி நீடித்து வருகிறது. இதில் மிசிகன் மாகாணத்தில் இருகட்சிகளின் வாக்கு வித்தியாசம் மிக நெருக்கமாக இருப்பதால் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய மாகாணமாக மிசிகன் மாறியுள்ளது.

இந்நிலையில் வெற்றிக்கு முன்னரே அதிபர் டிரம்புக்கும் துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜேன்ஸ் ஜனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க மக்கள் அதிபர் டிரம்பை மீண்டும் அதிபராக தேர்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது. அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸுக்கு எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்