அமெரிக்கா தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

நாளொன்றிற்கு அமெரிக்காவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.;

Update: 2020-10-31 12:51 GMT
வாஷிங்டன்

தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,043,957.இது, உலகின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் ஆகும். அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 229,676. அதாவது, நாளொன்றிற்கு சராசரியாக 800 பேர் கொரோனாவால் பலியாகிறார்கள்!

செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் இந்தியா 97,894 பாதிப்புகளை உறுதி செய்தது அதையும் விட அமெரிக்க  100,233 தினசரி பாதிப்புகளை உறுதி செய்து உலகளாவிய தொற்றுநோய்க்கான சாதனை படைத்துள்ளது. 

கடந்த பத்து நாட்களில் ஐந்து முறை, ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 77,299 பாதிப்புகளின்  முந்தைய ஒரு நாள் சாதனையை அமெரிக்கா மீறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கை, 90 ஆயிரத்தை நெருங்கியது. நாடு இப்போது ஒவ்வொரு நொடியும் ஒன்றுக்கும் மேற்பட்ட புதிய கொரோனா  பாதிப்புகளை உறுதி செய்வதை குறிக்கிறது.

மேலும் செய்திகள்