சீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 5 பேர் பரிதாப சாவு
சீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீஜிங்,
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹூய் மாகாணத்தின் ஹூனைனான் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு வேலை பார்த்து வந்தனர். கட்டுமான பணிகளுக்காக மிகவும் உயரமான ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக சக தொழிலாளர்களும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.