திமுகவை வீழ்த்திவிடலாம் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி

கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

Update: 2024-12-15 16:24 GMT

சென்னை,

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல 'வாழைப்பழ காமெடியை' போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி. திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் முதல்-அமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள்.

குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள்

ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓ.பி.எஸ். வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது; ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் 'வலிக்காமல் வலியுறுத்திவிட்டு' மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்