அதிமுக தொண்டர்களை நம்பி உள்ளது- கே.பி.முனுசாமி பேச்சு
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை,
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது ,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கழக தொண்டர்களின் உழைப்பை நம்பி இருக்கிறார். மு.க.ஸ்டாலின் கூட்டணியைதான் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார். கூட்டணியினர் எதிர் கருத்து கூறினால் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தி.மு.க. கூறுகிறது. 2026-ல் அதிமுக வெற்றி உறுதி.
அ.தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் 5 முதல் 6 மாதத்துக்குள் தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற மற்ற கட்சியை சேர்த்தவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றிபெறும் வாய்ப்பு வந்து விட்டது, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களுக்கு வரவேண்டும். அந்த சூழ்நிலையை உருவாக்க இந்த செயற்குழு-பொதுக்குழுவில் நாம் சூளுரை ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.