நாங்கள் மற்றொரு கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லமாட்டோம் - பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தின் 6 பில்லியன் டாலர் கடன் திட்டமே பாகிஸ்தானுக்கு கடைசியாக இருக்கும் என பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் ஆளுநர் ரேசா பகீர் கூறி உள்ளார்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் ஆளுநர் ரேசா பகீர் கூறியதாவது:-
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் கீழ் செயல்படுத்தப்பட்ட சமீபத்திய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பலவீனமான பொருளாதாரத்திற்கு தனது சொந்த காலில் நிற்க ஏதுவாக மிகவும் தேவையான ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளன.
அந்நிய செலாவணி இருப்புக்கள் போதுமான அளவு அதிகமாக இருப்பதே இதன் குறிக்கோள் ஆகும். அதனுடன் நாங்கள் மற்றொரு திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லமாட்டோம். உலகளாவிய கடன் வழங்குபவர்களிடம் இருந்து 6 பில்லியன் டாலர் கடன் பெற்றால் பாகிஸ்தான் எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற போதுமான வெளிநாட்டு நாணய இருப்பு வைத்திருப்பது குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
பொருளாதாரத்தை சுயாதீனமாக இயக்குவதற்கான மூன்று முக்கிய கூறுகளை எடுத்துரைத்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் (எஸ்.பி.பி) தலைவராக ரேசா பகீர் நியமிக்கப்பட்டார். அவர் பாகிஸ்தானுக்கு மாறுவதற்கு முன்பு எகிப்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.