“உலக பெண்களுக்காக போராடியவர்” - சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு டிரம்ப் மகள் இரங்கல்
உலக பெண்களுக்காக போராடியவர் என சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு டிரம்ப் மகள் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
வாஷிங்டன்,
பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான இவாங்கா டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், “சுஷ்மா சுவராஜ் மறைவால் கருணையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தலைவரை இந்தியா இழந்துவிட்டது. அவர் இந்திய பெண்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் ஆதரவாக போராடக்கூடியவராக இருந்தார். அவரை தெரிந்து வைத்திருப்பது கவுரவமான விஷயம்” என்று கூறியுள்ளார்.