காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தல்

காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.;

Update: 2018-10-22 17:05 GMT
இஸ்லாமாபாத், 

காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்கள் 6 பேரும் பலியானார்கள்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் வலைத்தளத்தில், ‘‘இந்திய பாதுகாப்பு படைகள் காஷ்மீரில் அப்பாவி மக்களை தொடர்ந்து கொன்று வருவது கண்டனத்துக்குரியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பது குறித்து இந்தியா உணருவதற்கு இதுவே சரியான தருணம்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்