அமெரிக்கா: உணவகத்தில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.;

Update:2023-06-10 23:56 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் இன்று இரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்