சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க கட்டுப்பாடு: அமெரிக்கா அதிரடி
சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க கட்டுப்பாடு விதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

இது குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சீனாவின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதி மறுக்கிறது. ஆனால், சீன அதிகாரிகள், சீன மக்கள் அமெரிக்காவுக்குள் சுதந்திரமாக வந்து, பல்வேறு வசதிகளை அனுபவிக்கிறார்கள்.
ஆதலால், திபெத் பகுதி்க்குள் வெளிநாட்டினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க மக்கள் நுழைய தடை விதிக்கும் சட்டங்களை வகுக்கும் மற்றும் நிறைவேற துணையாக இருக்கும் சீன அரசு அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு திபெத் அணுகல் சட்டப்படி விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டுவருகிறோம். திபெத்திய மக்களுக்கு நியாயமான முறையில் சுயாட்சி கிடைக்க ஆதரவு தருவோம்” என்று தெரிவித்துள்ளார்.