கொரோனா உலக பாதிப்பு 70 லட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது.

Update: 2020-06-07 16:02 GMT
லண்டன்,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்த வைரஸ் இப்போது உலகின் 200 நாடுகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் வீரியமோ உலகையே கதிகலங்க வைக்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 69 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும் செய்திகள்