செங்கல்பட்டில் பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டில் பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-07-10 08:05 GMT

வெட்டிக்கொலை

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளரான இவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

பா.ம.க.வினர் குவிந்தனர்

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பா.ம.க.வினர் குவிந்தனர். பா.ம.க. பிரமுகரான நாகராஜ் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடி குண்டு வீசி வாலிபர் ஒருவரை வெட்டிக்கொலை செய்த நிலையில் நேற்று பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலை யாளிகளை கைது செய்ய க்கோரி அந்தபகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்