சிவகாசி,
சாத்தூர்-கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீகரா வித்யா மந்திர் பள்ளியில் மதுரை மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஹெப்சிபாய் வரவேற்றார். பள்ளியின் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து கவுரவித்தார். உப்பத்தூர் ஜி.வி.ஜே. பள்ளி முதல்வர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். பள்ளியின் நிர்வாக அதிகாரி மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். போட்டியில் 290 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி, ராம்கோ பள்ளிகளும், மாணவிகள் பிரிவில் எம்.எம்.வித்யாஷ்ரம், அருப்புக்கோட்டை மினர்வா பள்ளிகளும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் உடற்கல்வி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.