சிதம்பரத்தில் பலத்த மழை:நடராஜர் கோவில் கோபுரத்தில் 3 சிலைகள் சேதம்

அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Update: 2024-12-13 23:41 GMT

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழையால் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவிலின் மேற்கு கோபுரத்தில் 2-ம் அடுக்கில் இருந்த 2 துவாரக பாலகர் சிலைகளும், மற்றொரு சிலையில் உள்ள இடது கால் பகுதியும் இடிந்து விழுந்தன. அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிலர் சிலை விழுந்ததை பார்த்து அலறி அடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனிடையே தகவல் அறிந்து வந்த கோவில் பொது தீட்சிதர்கள் உடைந்த சிலைகளை பார்வையிட்டனர். மேலும் கோவில் மேற்கு சன்னதி வாயிலை பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் அடைத்தனர். இதையடுத்து கீழே விழுந்த சிலைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

சிலைகள் சேதமானதால் ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள் நடத்தவும், நீதிமன்ற உத்தரவு பெற்று புதிய சிலைகள் அமைக்கவும் பொதுதீட்சிதர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்