பெண் கூட்டு பாலியல்: 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்த வந்தது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனையும், தலா 38 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.