ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில்புதிய தார்சாலை அமைக்கும் பணி

ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-09-12 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகேயுள்ள ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் 4 கி.மீ. தொலைவுக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்