கோவில் புனரமைப்பு பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்; கோர்ட்டு உத்தரவு
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக கோபிநாத் மீது வழக்கு தொடரப்பட்டது.
சென்னை,
கோவில் புனரமைப்புக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று பூந்தமல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் இருந்து வந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.