2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-25 19:48 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தை அடுத்த காங்குழி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வனின் மகன் கலைச்செல்வன்(வயது 34). இவர் தனக்கு திருமணமானதை மறைத்து தற்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து, நலுங்கு உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் செய்திருந்தனர். இந்நிலையில் திருமண நாள் அன்று திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக கலைச்செல்வனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருமணத்திற்காக சுமார் ரூ.3¼ லட்சம் செலவு செய்துள்ளோம், இது மட்டுமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்று கூறி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்