ஆரல்வாய்மொழி அருகேவேன் திருடிய வாலிபர் கைது

ஆரல்வாய்மொழி அருகேவேன் திருடிய வாலிபரைபோலீசார் கைது செய்த னர்.

Update: 2023-02-10 16:43 GMT

ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவருக்கு சொந்தமான ஆக்சிஜன் கம்பெனி ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்ல வேன் உள்ளது. அந்த வேனை சம்பவத்தன்று கம்பெனியின் உள்ளே நிறுத்திவிட்டு ஊழியர்கள் சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வேன் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி, டிரைவரிடம் விசாரணை நடத்திய போது. அவர் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அனந்த நாடார்குடியிருப்பை சேர்ந்த செல்வகுமார் (வயது 26) என்பதும், வேனை திருடி இயக்கி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்து, வேனை மீட்டனர்.

--

Tags:    

மேலும் செய்திகள்