பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-10-13 20:13 GMT

பாலியல் வன்கொடுமை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 30). இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 36 வயதுடைய பார்வையற்ற பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு அரியலூர் மகளிர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி ராஜ்மோகனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், வீட்டுக்கதவை அடைத்து வைத்ததற்கு ஓராண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அந்தப் பெண்ணை அடித்ததற்கு ஓராண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்