சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-17 20:14 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருைடய மகன் கணேசன் (வயது 20). கூலி தொழிலாளியான இவர் சிறுமிகளிடம் பழகி, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்