சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-26 18:12 GMT

காதல் திருமணம்

பெரம்பலூரை அடுத்த ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் (வயது25). இவர் பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ராஜேஷ் திருமணம் செய்து கொண்டது, குழந்தை திருமணம். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ், அவரது தந்தை சின்னசாமி, தாய் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தை ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்