இளைஞர் திறன் திருவிழா

தியாகதுருகத்தில் இளைஞர் திறன் திருவிழா

Update: 2022-12-24 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட இயக்குனர்(மகளிர் திட்டம்) சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வீராசாமி, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் சிவநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித்திட்ட அலுவலர் ராஜா வரவேற்றார். இதில் தியாகதுருகம் ஒன்றியத்தை சேர்ந்த 8-ம் வகுப்புக்கு மேல் கல்வி தகுதியுடைய 35-வயதுக்குட்பட்ட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 17 நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலைத்துறை மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் திறன் மேம்பாடு குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாவட்ட திறன் பயிற்சி கழக உதவி பயிற்சி அலுவலர் நஷீர் ஷெரீப், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுனர்கள் வசந்தன், முத்து வினோத்குமார், சுந்தர்ராஜ், சுய உதவிக்குழு நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இயக்க மேலாளர் ஹேமலதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்