ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 நாய் குட்டிகளை மீட்ட இளைஞர்கள்...!

திட்டக்குடி அருகே 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 நாய் குட்டிகளை கயிறு கட்டி இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

Update: 2022-12-23 09:42 GMT

கடலூர், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எ.அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆழ்துளை கிணற்றிலிருந்த மோட்டார் பழுதடைந்ததால் பழுது நீக்கம் செய்ய ஆழ்துளை கிணற்றின் மூடியை கழட்டியவர்கள், மூடாமல் கிடப்பில் போட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 நாய்க்குட்டிகள் தவறி சுமார் 50 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

நாய் குட்டிகள் கூச்சலிடும் சத்தத்தை கேட்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கயிற்றை பயன்படுத்தி மூன்று நாய்க்குட்டிகளையும் லாவகமாக உயிருடன் மீட்டனர். மனிதாபிமானத்தோடு நாய் குட்டிகளை மீட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மேலும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக பயன்படுத்தாமல் உள்ள ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்