உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் தலையை வெளியே நீட்டியபடி சென்றபோது, வேன் மோதி பலியானார்.

Update: 2023-10-24 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

வேன் மோதியது

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் மகன் அய்யப்பன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் ஏறி சேந்தமங்கலத்தில் இருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஆட்டோவில் அமர்ந்தபடி தலையை மட்டும் வெளியே நீட்டியபடி பயணம் செய்தார். அந்த சமயத்தில் எதிரே சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக அய்யப்பன் தலை மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்