மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
ஆதனக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அடுத்த போரம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்காக போரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் உருமையா (வயது 23) என்பவர் மின் கம்பத்தில் ஏறி குழாய் வடிவிலான ஸ்பீக்கரை கட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் கீழே விழுந்தார்.
வாலிபர் சாவு
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உருமையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.