தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

வாணியம்பாடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது;

Update: 2022-07-29 16:04 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி நேதாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதியினர் புகார் கூறி வந்தனர்.

இதுகுறித்து, வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று  இரவு வாணியம்பாடி செட்டியப்பனூர் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், அவர் மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்த நஜீம் (வயது 23) என்பதும், நேதாஜி நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 கிராம் நகை பறிமுதல்செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்