வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

கும்பகோணம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் கோா்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது

Update: 2023-02-02 20:46 GMT

கும்பகோணம், பிப்.3-

கும்பகோணம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் கோா்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

சங்கிலி பறிக்க முயற்சி

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் சோழன் மாளிகை பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி சுதா (வயது 30). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி வீட்டின் அருகே உள்ள வயலில் தனது மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த கோபிநாத பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பாலு மகன் வீரமணி(23) சுதா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா தான் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து வீரமணியை பிடிக்க முயன்றனர்.

2 ஆண்டுகள் சிறை

ஆனால் வீரமணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சுதா பட்டீஸ்வரம் போலீசில் புகார் அளித்தாா்.இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.இதில் நீதிபதி பாரதிதாசன் சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்ற வீரமணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்