பஸ் மோதி வாலிபர் பலி

பாளையங்கோட்டையில் பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-08-11 20:48 GMT

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 28). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மகாராஜநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரிட்டோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்