தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Update: 2023-04-20 18:45 GMT

விருதுநகர் அல்லம்பட்டி சுந்தரம் தெருவை சேர்ந்தவர் மீனா(வயது 38). கணவரை பிரிந்து வாழும் இவரது மகன் கனிஷ் பாண்டி(19). பிளஸ்-2 முடித்துவிட்டு கார் மெக்கானிக்காக இருந்து வரும் கனிஷ் பாண்டி சம்பவத்தன்று சாப்பிடும் போது ஏற்பட்ட பிரச்சினையில் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார். பின்னர் கனிஷ்பாண்டி வீட்டு மாடிக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்