அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் சவேரியார்கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆலன் (வயது 24). இவர் தஞ்சையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் வீடு கட்டி வருவதாகவும், அதற்கு ஆலன் பணம் கொடுக்கவில்லை என்றும், அதற்காக அவரது தாயார் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆலன் சம்பவத்தன்று அய்யம்பேட்டை மதகடி பஜார் மதுபான கடையின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார், ஆலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.