தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-22 19:27 GMT


விருதுநகர் மேலரத வீதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 35). இவருடைய மனைவி சொர்ண லதா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் அம்மாபட்டியில் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. விமல்குமார் தனது மனைவியிடம் நான் செத்தால் தான் உனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். வழக்கமாக விமல் குமார் இவ்வாறு நடந்து கொள்ளும் நிலையில் சொர்ணலதா அதை பொருட்படுத்தாமல் தனது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சொர்ணலதா அடுத்த அறைக்கு சென்று பார்த்தபோது விமல்குமார் அந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி சொர்ணலதா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்