தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-28 20:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கோத்தகிரி தாலுகா நெடுகுளா அருகே உள்ள பாமுடி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் மனோஜ் குமார்(வயது 25). இவர் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில் மனோஜ் குமார் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமலும், பிறருடன் பேசாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் மனோஜ்குமார் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மனோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க வைப்பதாக இருந்தது.

அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்