விழுப்புரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-07-22 18:45 GMT

செஞ்சியை அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செந்தமிழ்செல்வன் (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினர் மகளான 19 வயது பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 20-ந் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற செந்தமிழ்செல்வன், அப்பெண்ணிடம் பேச முயன்றார். ஆனால் அந்த பெண், வெளியே சென்றுவிட்டதால் மனமுடைந்த செந்தமிழ்செல்வன் அந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து செந்தமிழ்செல்வனின் பெற்றோர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்