கஞ்சாவுடன் வாலிபர் கைது
நெல்லை அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் போலீசார், தருவை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகில் இந்திரா காலனியை சேர்ந்த முத்துகுமார் (வயது 25) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து முத்துகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 35 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.